fbpx

கொரோனா பரவல் அதிகரிப்பு.. நாளை முதல் மாஸ்க் கட்டாயம்.. மருத்துவத்துறை அமைச்சர் உத்தரவு..

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உட்பட அனைவரும் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..

கொரோனா இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. கடந்த ஓராண்டாக இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.. நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது..

இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. சென்னையில் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையை தொடங்கிவைத்தார்.. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, உலகம் முழுவதும் மீண்டும் தாண்டவம் ஆடுகிறது.. ஆனால் பொதுமக்களிம் போதிய விழிப்புணர்வு இல்லை.. கொரோனா நெறிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் வருபவர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.. நாளை முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும்.. ” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

ஐபிஎல் தொடக்க விழாவில் குத்தாட்டம் போட காத்திருக்கும் ராஷ்மிகா, தமன்னா..!! ரசிகர்கள் செம குஷி..!!

Fri Mar 31 , 2023
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகள், இன்று மாலை 6 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள, நரேந்திர மோடி மைதானத்தில் இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவே மிக பிரமாண்டமாக துவங்க உள்ளது. இந்த IPL கிரிக்கெட் போட்டியின் துவங்க விழாவில், தமன்னா பாத்தியா மற்றும் நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கலந்து கொண்டு, துவக்க விழாவை தன்னுடைய நடனத்தால் களைகட்ட வைக்க உள்ளதாக, அதிகாரப்பூர்வ […]

You May Like