தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுக்காக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
திருநெல்வேலி டவுனில் பெய்த கனமழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம், முகமது அலி தெரு, கே.டி.சி., நகர் கீழநத்தம் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்தது. நீர்வரத்து அதிகரித்ததால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நீரின் அளவு அபாய கட்டத்தை எட்டவில்லை. இருப்பினும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தாமிரபரணியில் வெள்ளம் அதிகரிப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read more ; நீதிபதிகள் ஃபேஸ்புக்கில் இருக்கக்கூடாது!. துறவிகள் போல் வாழவேண்டும்!. உச்சநீதிமன்றம்!