fbpx

’அதிகரிக்கும் கொரோனா’..!! ’தயார் நிலையில் இருங்கள்’..!! மத்திய அரசு அதிரடி..!!

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் முதன்மை தலைமைச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து மாநிலங்களிலும் சுகாதார வசதிகள் உள்கட்டமைப்புகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஏப்ரல் 8, 9 ஆம் தேதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் சுகாதாரத் தயார்நிலையை மதிப்பாய்வு செய்யவும், ஏப்ரல் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் அனைத்து மருத்துவமனை உள்கட்டமைப்புகளின் போலி பயிற்சிகளை நடத்தவும் மாநில சுகாதார அமைச்சர்களை அவர் வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி, பொதுமக்களிடையே தேவையில்லாத அச்சத்தை பரப்பாமல், எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்’ எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

குரூப் 4 தேர்வில் மீண்டும் முறைகேடா..? டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பரபரப்பு விளக்கம்..!!

Fri Apr 7 , 2023
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 10,117 காலிப்பணியிடங்களில் தட்டச்சர் பிரிவில் மட்டும் 2,500 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கு 450 பேர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தேர்ச்சி பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து அதிகளவில் தேர்வாகியுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் […]

You May Like