Trump: டெஸ்லாவின் கார்களையோ அல்லது அதன் சொத்துக்களையோ சேதப்படுத்தியதாக யாராவது பிடிபட்டால், அவர்கள் 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பின், எலோன் மஸ்க் DOGE தலைவராகப் பொறுபேற்றுள்ளார். அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்கும் துறையின் தலைவராகவும் எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்தார். கடந்தமுறை டிரம்ப் அதிபராக இருந்தபோது, அவர் நடத்தும் தொழில் நிறுவனங்கள், அவரது சொத்துகளை குறி வைத்து போராட்டங்கள், வன்முறைகள் நடந்தன. அதேபோல, தற்போது எலான் மஸ்க்குக்கு சொந்தமான டெஸ்லா காரை குறி வைத்து, அமெரிக்காவின் பல இடங்களிலும் தொடர் வன்முறைகள் நடக்கின்றன. அதாவது, டீலர்ஷிப்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்களுக்கு எதிராக நாசவேலை சம்பவங்கள் மற்றும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த தாக்குதல்களை உள்நாட்டு பயங்கரவாதம் என, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி குறிப்பிட்டிருந்த நிலையில், தெற்கு கரோலினா மாகாணத்தில், டெஸ்லா ஷோரூமுக்கு தீ வைத்த ஒருவர் கைதானார். ஒரிகான், லாஸ் வாகேஸ், கொலோரடா என, பல இடங்களிலும் பாட்டில் குண்டு வீச்சு, தீ வைப்பு என தாக்குதல்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், டெஸ்லா மீது கை வைத்தால், 20 ஆண்டு சிறை தண்டனை உறுதி என, அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘டெஸ்லா தொடர்பான இடங்களில் நாசவேலை செய்து சிக்கிக் கொள்பவர்கள், அவர்களுக்கு பின்னணியில் இருந்து பணம் உள்ளிட்ட உதவிகளை வழங்குபவர்களுக்கு, 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.உங்களைத் தான் நாங்கள் தேடிக் கொண்டு இருக்கிறோம்’ என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Readmore: ஐபிஎல் 2025 திருவிழா இன்று தொடக்கம்!. KKR-RCB மோதல்!. 80% மழை பெய்ய வாய்ப்பு!