இந்தியா – பாகிஸ்தான் கால்பந்து போட்டியில் இரு அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் மைதானத்தில் பரபரப்பு நிலவியது.
பெங்களூருவில் இன்று தொடங்கிய இந்த தொடர் ஜூலை 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா -பாகிஸ்தான் மோதிய போட்டியில் வீரர்கள் மைதானத்தில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. பாகிஸ்தான் வீரரிடம் இருந்த பந்தை, இந்திய அணி மேலாளர் பிடுங்கவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்திய அணி மேலாளர் இருவருக்கு சிவப்பு அட்டையும், பாகிஸ்தான்மேலாளர் அன்வருக்கு மஞ்சள் அட்டையும் கொடுக்கப்பட்டது.
இந்த கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 4க்கு பூஜியம் என்ற கோல்கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது.