fbpx

IND vs WI 1st Test!… ஜெய்ஸ்வால், அஸ்வின் அதிரடி!… இன்னிங்ஸ், 141ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியானது டொமினிகாவில் நடைபெற்றது. டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அற்புதமான பவுலிங்கால் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியின் அறிமுக போட்டியாளரும் இளம் வீரருமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது நாளில் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார் ஜெய்ஸ்வால். அவருடன் சேர்ந்து அற்புதமான பார்ட்னர்ஷிப் போட்ட இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இவர்களது அபாரமான ஆட்டத்தால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில், அதிகபட்ச முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பை இந்திய அணி பதிவு செய்தது. அதன்படி, முதல் விக்கெட்டுக்கு 229 ரன்களை ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் இணை சேர்த்தது.

கோலி, ஜெய்ஸ்வால் இருவரும் 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த ஜெய்ஸ்வால் 171 ரன்கள் எடுத்து அவுட்டானார். கோலி 76 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்திய அணி 152.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அத்துடன் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் அந்த அணி தொடக்கத்திலேயே தடுமாறி வந்தநிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிரெய்க் பிராத்வைட் (7), சந்தர்பால்(7) ரேமன் ரைபர் (11), பிளாக்வுட் (5), ஜோசுவா டா சில்வா(13) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், வந்த சிறிது நேரத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50.3 ஓவர்களை எதிர்கொண்டு130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

Kokila

Next Post

அறிமுக போட்டியிலேயே அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால்!... 47 ஆண்டுகளுக்குபின் முதல் இந்திய வீரராக புதிய சாதனை!

Sat Jul 15 , 2023
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால், தான் களமிறங்கிய அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியதுடன், பல சாதனைகளை படைத்துள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியானது டொமினிகாவில் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அற்புதமான பவுலிங்கால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறினர். இதனால், முதல் இன்னிங்ஸில் 150 […]

You May Like