fbpx

Strike | இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!! வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி வருவாய்த் துறையினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்கூடிய வேலைநிறுத்த போராட்டத்தில் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களவை தேர்தல் பணிகளை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய வருவாய்த் துறையினர் இன்று (பிப். 27) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது. வருவாய்த்துறையினரின் போராட்ட விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More : Agnipath | இளைஞர்களே..!! காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து..!! அதிரடி அறிவிப்பு..!!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து, அவற்றிற்கு ஈடாக புதிய ஈப்புகளை உடனடியாக வழங்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள, முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Chella

Next Post

Lok Sabha | பாஜகவுக்கு 18.48%, அதிமுகவுக்கு 17.26% வாக்குகள்..!! தனியார் செய்தி நிறுவனத்தை வெச்சு செய்யும் அதிமுகவினர்..!!

Tue Feb 27 , 2024
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு […]

You May Like