fbpx

முதல் வெற்றியை ருசித்தது இந்தியா கூட்டணி..! உ.பி.யில் ஆளும் பாஜகவை வீழ்த்தியது இந்தியா கூட்டணி..!

கேரளா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கும் இடையே நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி உத்தரபிரதேசத்தில் உள்ள கோசி தொகுதி, ஜார்கண்டின் டும்ரி மற்றும் தன்பூர் தொகுதிகள், திரிபுராவில் உள்ள போக்ஸாநகர், உத்தரகாண்டின் பாகேஷ்வர்தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் ஒருங்கிணைந்து இந்த இடைத்தேர்தலை சந்தித்தது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள துப்குரி தொகுதி மற்றும் கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் இந்தியா கூட்டணி தனித்து போட்டியிட்டது. நடந்த 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி 4 தொகுதிகளும், பாஜக கூட்டணி 3 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள் :

  1. கேரளா: கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சாண்டி உம்மன் வெற்றி பெற்றுள்ளார். சாண்டி உம்மன் மொத்தம் 80,144 வாக்குகள் பெற்றுள்ளார். இவர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெயிக் தாமஸ் பெற்ற 42,425 வாக்குகளைவிட 37,719 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
  2. ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் டும்ரி தொகுதியில் INDIA கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் பீபி தேவி வெற்றி பெற்றுள்ளார்.
  3. மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலம் தூப்குரி தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் வெற்றி.
  4. உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசம் மாநிலம் கோசி தொகுதி சமாஜவாதி கட்சியின் வேட்பாளர் சுதாகர் சிங் வெற்றி பெற்றுள்ளார். இந்த மாநிலத்தில் இடைத்தேர்தலில் ஆளும் பாஜக வெற்ரி பெறாதது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்டுகிறது.

பாஜக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள் :
1.உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாவட்டம் பாகேஸ்வர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வதி தாஸ் 2,405 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  1. திரிபுரா: திரிபுர மாநிலத்தில் 2 தொகுதிகளில் இடைத்தேர்த நடைபெற்றது அதில் இரண்டிலும் பாஜக வெற்றிபெற்றது.
    அதன் படி போக்ஸநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் டஃபஜ்ஜல் ஹுசைன் 30,237 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    தன்புர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிந்து தேவ்நாத் 18,871 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

Kathir

Next Post

சேலை கட்டி ஒரே மாதிரி நடித்தால் போர் அடிக்கும்!… அதனால் 17 வயதில் 40 வயது பையனுக்கு!… விருமாண்டி அபிராமி ஓபன் டாக்!

Sat Sep 9 , 2023
நடிகை என்றால் நாம் எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும் என்றும் அதைவிட்டுவிட்டு சேலை கட்டிக்கொண்டு ஒரே மாதிரி நடித்தால் அது சரியாக இருக்காது என்று விருமாண்டி பட நடிகை அபிராமி பேசியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அபிராமி, தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். 2004ம் ஆண்டு வெளியான விருமாண்டி திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. கதை, திரைக்கதை, இளையராஜாவின் இசை, மேக்கிங், கமலின் நடிப்பு […]

You May Like