fbpx

சேப்பாக்கத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி!… மார்ச் 13ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை!…

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 13 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியைக் காண டிக்கெட் விற்பனைக்கான துவக்க தேதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

மார்ச் 13 ஆம் தேதி முதல் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலமாக தொடங்கப்பட உள்ளது. PAYTM செயலி மற்றும் http://www.insider.in என்ற வலைதள பக்கத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன.18 ஆம் தேதி காலை 11 மணி முதல் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நேரடியாக டிக்கெட் விற்பனை தொடங்கப்பட உள்ளது. போட்டியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விதித்துள்ளது. டிக்கெட் விலை குறைந்தபட்சம் 1,200 முதல் அதிகபட்சம் 10,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Kokila

Next Post

விவசாயிகள் கவனத்திற்கு.. ரூ.2,000 பணம் பெறாதவர்கள் இந்த எண்களில் புகார் அளிக்கலாம்..

Fri Mar 10 , 2023
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 பணம் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்படும். […]
PM-Kisan..!! விவசாயிகளுக்கு 13-வது தவணைத் தொகை..!! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

You May Like