fbpx

இந்தியா – கனடா மோதல்!… மஹிந்திராவை தொடர்ந்து JSW ஸ்டீல் நிறுவனமும் பங்கு விற்பனை ஒப்பந்தத்தை குறைத்தது!

காலிஸ்தான் விவகாரத்தால் இந்தியா – கனடா இடையேயான பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது மஹிந்திரா நிறுவனத்தை தொடர்ந்து JSW ஸ்டீல் நிறுவனமும் பங்கு விற்பனை ஒப்பந்தத்தை குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், கனடா – இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இரு நாடுகளின் பொருளாதாரமும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா மற்றும் மஹிந்திரா கனடாவில் தனது வணிகத்தை மூட முடிவு செய்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருவதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கனட நிறுவனமான ரேசன் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷனுடனான தனது கூட்டணியை முடித்துக்கொண்ட மஹிந்திரா மற்றும் மஹிந்திராவைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட், கனட நிறுவனமான டெக் ரிசோர்சஸ் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தத்தை குறைத்துள்ளது.

டெக் ரிசோர்சஸின் எஃகு உற்பத்தி அலகு மற்றும் நிலக்கரி யூனிட் ஆகியவற்றில் பங்குகளை JSW வங்க இருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் மோதல் போக்கிற்கு மத்தியில் ஒப்பந்தத்தை குறைத்துள்ளது. தொடர்ந்து, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சீக்கியர்கள் அதிகளவில் கனடாவுக்கு செல்லத் தொடங்கினர். ஆண்டுக்கு சராசரியாக 11 ஆயிரத்து 750 சீக்கியர்கள் புலம்பெயர்கின்றனர். கனடாவில் வசிக்கும் சீக்கியர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. உயர்கல்வி மற்றும் வேலை தேடி சீக்கியர்கள் அதிகளவில் இந்தியாவில் இருந்து செல்வதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சீக்கியர்கள் மட்டுமல்லாது, ஆண்டுதோறும் தமிழர்கள் அங்கு செல்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில், இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சென்ற 3.1 லட்சம் தமிழர்கள் அங்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது. கனடாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள். சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் அங்கு உயர்கல்வி பயில்கின்றனர். அதிலும் தமிழர்கள் ஜனவரி மற்றும் மே மாதம் என ஆண்டுக்கு இருமுறை, மேற்படிப்புக்காக கனடா செல்கின்றனர். வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 5.26 சதவீதம் இந்தியர்கள் கனடாவில் உள்ளனர். கனடாவின் பொருளாதாரத்தின் பெரும்பகுதி அங்கு படிக்கும் இந்திய மாணவர்களைச் சார்ந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், உலக நாடுகளில் இருந்து மாணவர்கள் கனட பொருளாதாரத்திற்கு 30 பில்லியன் டாலர்களை பங்களிக்கின்றனர், இதில் இந்திய மாணவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். கனடாவில் உயர்கல்வி பெற இந்திய மாணவர்கள் பெரும் தொகையை செலுத்துகின்றனர். எனவே, இந்திய மாணவர்கள் அங்கு செல்வதை நிறுத்தினால் கனடாவின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்திக்கும். டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற 30 இந்திய நிறுவனங்கள் கனடாவில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளன, இந்த நிறுவனங்களால்தான், கனடாவில் அதிக மக்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.

இந்தநிலையில், தற்போது நிலவும் பதற்றம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2023 வரை, கனடா இந்தியாவில் சுமார் $3306 மில்லியன் முதலீடு செய்துள்ளது. கனடாவின் ஒன்பதாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. எனவே, உறவுகள் மோசமடைந்தால், கனடா கடும் இழப்புகளைச் சந்திக்க நேடும் என்று தெரியவந்துள்ளது.

Kokila

Next Post

நான் தந்த யோசனை ரூ.1000 உதவித்தொகை!… பொறாமைப்படாமல் பாராட்டுகிறேன்!… மநீம தலைவர் கமல்ஹாசன்!

Sun Sep 24 , 2023
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை நான் தந்த யோசனை. எனது யோசனையை தமிழக அரசு எடுத்துக் கொண்டாலும் பொறாமைப்படாமல் பாராட்டுகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன், மாணவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் ஜனநாயகம் வாழும். உங்களுக்கெல்லாம் வாக்களிக்கும் வயது வந்துவிட்டது. கையில் மை வைக்கப்படுவதற்கு முன் யாரைத் தேர்தெடுக்கிறோம் […]

You May Like