பஹல்காம் தாக்குதலில் இந்தியா நாடகம் ஆடுவதாகவும், இந்த தாக்குதல்களை இந்தியாவே செய்ததாகவும் லஷ்கர்-இ-தொய்பா துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது. பைசரன் எனப்படும் பிரபலமான புல்வெளியில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், அங்கு சுற்றுலா வந்திருந்தவர்களே இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர். 13-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) என்ற அமைப்பின் துணை பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு ஏற்றுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று லஷ்கர்-இ-தொய்பா துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, கண்களில் கண்ணீருடன் தகவல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அமைதியை சீர்குலைக்க யாரோ முயற்சி செய்கிறார்கள் என்றும் உலக நாடுகள் இந்தியாவை ஆதரிக்க வேண்டாம் என லஷ்கர்-இ-தொய்பா எச்சரிக்கை விடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு சைஃபுல்லா கசூரி மூளையாக செயல்பட்டார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் இந்தியா நாடகம் ஆடுவதாகவும், இந்தியாவே இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More : ஒருவேளை போர் வந்தால்..? இந்தியா vs பாகிஸ்தான் ராணுவ பலம் தெரியுமா..? கிட்ட கூட நெருங்க முடியாது..!!