fbpx

Big Alert: ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவில் கடுமையான வெப்ப தாக்கம் ஏற்படும்..‌!

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் கடுமையான வெப்ப தாக்கம் ஏற்படும்.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வுத் துறை இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில்; ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் கடுமையான வெப்ப தாக்கம் ஏற்படும், இதனால் மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப பகுதிகள் மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு இமயமலைப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வடக்கு ஒடிசாவின் சில பகுதிகளில் இயல்பிலிருந்து இயல்பை விடக் குறைவான அதிகபட்ச வெப்பநிலை இருக்கலாம் என்று அவர் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கி, பொதுத் தேர்தலுடன் இணைந்து இந்தியா தீவிர வெப்ப தாக்கத்தை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அனைத்து அதிகாரிகளும் முன்கூட்டியே தயாராக வேண்டியது அவசியம் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

மேலும் வரவிருக்கும் இரண்டரை மாதங்களில் தீவிர வானிலை நிலவும். நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இந்த காலகட்டத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் சூழல் நிலவுகிறது. அதுபோன்ற காலகட்டத்தில் மக்களுக்கு உரிய பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தீவிர வெப்பம் குறித்த முன்னறிவிப்புக்கு மத்தியில் வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அமைச்சர் கூறினார்.

Vignesh

Next Post

Madras Eye: கொளுத்தும் வெயில்…! அதிகரிக்கும் கண் நோய்…! பாதுகாப்பது எப்படி ?

Tue Apr 2 , 2024
கோடை வெயில் கொளுத்தும் நிலையில் கண் நோய் பாதிப்புகளும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் தலையெடுக்க தொடங்கி விட்டது.நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதிலும் வாகன ஓட்டிகள் மிகவும் மோசம்.இந்த வெயிலினால் கோடை கால நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெப்ப அலை: அதிகப்படியான வெப்பம் காரணமாக நம் உடலில் வெப்ப நிலை […]

You May Like