fbpx

’இந்தியாவே வியந்துருச்சு’..!! ’இது நமது பயணத்தின் முக்கிய மைல்கல்’..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் பெருமிதம்..!!

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் 27 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாடு குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இருநாள் மாநாடு – 20,000 தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.

நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு இளைஞர்களும், மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில், மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு. ‘எல்லோருக்கும் எல்லாம், ‘எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி’ என்ற நமது பயணத்தின் இது முக்கிய மைல்கல்!“ என்று பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

சென்னையில் பேருந்துகள் ஓடுகிறதா..? MTC நிர்வாகம் வெளியிட்ட முக்கிய பதிவு..!!

Tue Jan 9 , 2024
இன்று காலை முதலே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னையில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என 6 கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே […]

You May Like