fbpx

விக்கெட் எடுக்கமுடியாமல் திணறும் இந்தியா!… அவுட் ஆவுடா! தமிழில் வைரலாகும் போஸ்டர்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறிவரும் நிலையில், அவுட் ஆவுடா, விக்கெட் ப்ளீஸ் என்று போஸ்டரை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, ஹெட்-ஸ்மித் அபார ஆட்டத்தின் காரணமாக முதல் நாள் முடிவில் 327 ரன்கள் குவித்துள்ளது.

அதாவது, ஹெட் மற்றும் ஸ்மித் இருவரும் 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்து விளையாடி வருகின்றனர். இதனால், இந்திய வீரர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்திய வீரர்கள் மட்டுமல்ல போட்டியை பார்த்து வரும் ரசிகர்களால் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவுட் ஆவுடா என்றும், விக்கெட் பிளீஸ் என்றும் ரசிகர்கள் போஸ்டரை வெளியிட்டு வருகின்றனர். இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்து பேட்டிங் ஆடுவதற்கு பதிலாக பவுலிங் தேர்வு செய்து மோசமான முடிவு எடுத்துள்ளார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால், முதலில் பேட்டிங் எடுத்திருக்க வேண்டும். இதே போன்று உலக சிறந்த டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் எடுக்காதது இந்திய அணிக்கு இழப்பாக அமைந்துள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Kokila

Next Post

No.1 பவுலர் அஸ்வின் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி!... வாட்டர் பாயாக வந்து கேப்டனுக்கு அறிவுரை!

Thu Jun 8 , 2023
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான அஸ்வின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித், ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரும், உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலருமான அஷ்வினுக்கு இந்திய […]

You May Like