fbpx

பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராக இருப்பது பெருமை அளிக்கிறது….! அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் நரேந்திர மோடி பெருமிதம்….!

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்த பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து அவருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றியுள்ளார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் இன்று உரையாற்றுவது பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி மற்றும் மார்டின் லூதர் கிங் ஜூனியரை இந்த நேரத்தில் நினைத்து பார்ப்பதாகவும் மோடி குறிப்பிட்டு பேசினார்.

அதோடு கடந்த 9 வருடங்களில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் பல்வேறு வளர்ச்சியை கண்டிருப்பதாகவும் ஆனால் முக்கியமாக ஏ 1 என்பது அமெரிக்கா, இந்தியாவின் நல்லுறவு என்று குறிப்பிட்டுள்ளார் இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கரகோஷத்தை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகம் என்பது ஒரு கலாச்சாரம் எனவும், அந்த கலாச்சாரம் கருத்துக்களுக்கும் அதனை வெளிப்படுத்துவதற்கும் சிறகுகளை வழங்கும் என்று கூறினார். மேலும் ஜனநாயகத்தின் தாய் நாடாக இந்தியா திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேறும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் உச்சி மாநாட்டின் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தை சுட்டிக் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்கு முன்னதாகவே இலக்கை எட்டிய ஒரே ஜி-20 நாடு இந்தியா தான் என்று பெருமிதம் கூறினார். இந்தியாவில் 2500 அரசியல் கட்சிகள் இருப்பதாகவும் 20 மாநிலங்களை வெவ்வேறு கட்சிகள் ஆட்சி புரிவதாகவும் அவர் கூறினார்.

மேலும் இந்தியாவில் பெண்களின் முன்னேற்றம் அதிகரித்து இருப்பதாகவும், பாதுகாப்பு படையில் இந்திய பெண்களின் பங்கு அதிகரித்து இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அதே சமயம் பழங்குடியின பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக இருந்து இந்தியாவை வழி நடத்துவதாகவும் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

உக்ரைன் போர் குறித்து தன்னுடைய உரையில் குறிப்பிட்ட நரேந்திர மோடி இது போருக்கான காலம் அல்ல எனவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு உகந்த நேரம் எனவும் கூறினார். இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தி இருக்கிறார். அதோடு பயங்கரவாதம் என்பது உலகிற்கே பேராபத்தை ஏற்படுத்துவதாகவும் பிறந்தநாள் நரேந்திர மோடி குறிப்பிட்டு பேசினார்.

Next Post

இந்திய சந்தையில் படு அடி வாங்கி உற்பத்தியை நிறுத்திய 7 பைக் நிறுவனங்கள்..!! என்னென்ன தெரியுமா..?

Fri Jun 23 , 2023
ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய பைக்குகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அதில், சில பைக்குகள் விற்பனையில் பெரும் வெற்றியை பெறுகிறது. மற்றவை கொஞ்சம் சந்தையை தாக்குப்பிடித்து நிற்கிறது. ஒரு சிலதோ இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட 7 பைக்குகள் குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த பைக்குகள் வித்தியாசமான விளம்பர யுக்தியைக் கொண்டு களமிறக்கப்பட்டாலும், சில நாட்களிலேயே இருந்த […]

You May Like