fbpx

இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்..!! களமிறங்கும் அதிரடி பட்டாளம்..!! இன்னைக்கு சம்பவம் இருக்கு..!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 டி20 போட்களில் விளையாடுகிறது. இதில், முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டி தொடரின் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று நடைபெறவுள்ளது. டி 20 தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களம் இறங்குகிறது. துணைகேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். அவரது தலைமையில் சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ஆடிய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி அதற்கு பதிலடி கொடுக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே, இந்த ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியலில் இந்திய அணியில், சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங். குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணியில், பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), பிளேர் டிக்னெர், சோதி, பென் லிஸ்டெர், லோக்கி பெர்குசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Chella

Next Post

சென்னையில் சிறிய ரக அஞ்சல்தலை கண்காட்சி...! 28-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு...!

Fri Jan 27 , 2023
இந்திய அஞ்சல் துறை சார்பாக நடைபெற உள்ள அம்ரித்பெக்ஸ் 2023 என்ற நிகழ்ச்சியின் முன்னோட்டமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சிறிய ரக அஞ்சல்தலை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், தமிழகத்தைச் சேர்ந்த அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்தியா மற்றும் சர்வதேச உறவுமுறைகள் முதலிய கருப்பொருட்களில் வெளியிடப்பட்ட அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. . துவக்க விழாவின்போது […]
இந்திய அஞ்சல் துறையில் 60,000 காலியிடங்கள்..? தீயாய் பரவும் செய்தி உண்மையா..?

You May Like