India – New Zealand: சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிகட்டத்தை நெருங்கிவரும் நிலையில் அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி இன்று நடைபெறவுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா நியூசிலாந்து போட்டி இன்று நடைபெற உள்ளது. குரூப் ஏ-வில் உள்ள இந்திய அணி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி விட்டு அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. நியூசிலாந்தும் பாகிஸ்தான், வங்கதேச அணிகளை பந்தாடி விட்டு அரையிறுதிக்குள் வந்து விட்டது. மேலும் குரூப் பி-யில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால் இது முக்கியத்துவம்வாய்ந்த ஆட்டமாக மாறி உள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சிறிய காய பிரச்சனையுடன் போராடிய கேப்டன் ரோகித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியானது. இதனால் சுப்மன் கில் கேப்டனாக செயல்படுவார் எனவும் கூறப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் ரோகித் சர்மா விளையாடுவது உறுதியாகி உள்ளது. அதே வேளையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கால் வலியால் அவதிப்பட்ட முகமது ஷமி நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஷமி விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் ஷமிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் விளையாட இருக்கிறார்.
குல்தீப் யாதவ்க்கு பதிலாக தமிழ்நாடு வீரர் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியும் விளையாட உள்ளனர். இதேபோல் அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரையும் விளையாட வைகக் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Readmore: மோசமாகும் டிரம்ப்-ஜெலென்ஸ்கி உறவு!. உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கும் நாடுகள்!. இந்தியாவின் நிலைபாடு என்ன?