இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 68 காலிப்பணியிடங்கள் நிரப்ப படுகிறது.
வயது வரம்பு :
* 01.12.2024 தேதியின்படி, உதவி மேலாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
* மேலாளர் பதவிக்கு 23 வயது முதல் 35 வயது வரை இருக்கலாம்.
* முதுநிலை மேலாளர் பதவிக்கு 26 வயது முதல் 35 வயது வரை இருக்கலாம்.
* சைபர் பாதுகாப்பு நிபுணர் அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி : இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் உள்ள இப்பணியிடங்கள் துறை சார்ந்த பிரிவில் B.E/B.Tech முடித்திருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவி மேலாளர் பதவிக்கு 1 வருடம், மேலாளர் பதவிக்கு 3 வருடம் மற்றும் முதுநிலை மேலாளர் பதவிக்கு 6 வருடம் வரை பணி அனுபவம் தேவை
சம்பள விவரம் :
* உதவி மேலாளர் பணிக்கு தோராயமாக மாதம் ரூ.1,40,398 வழங்கப்படும்.
* மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.1,77,146 வழங்கப்படும்.
* முதுநிலை மேலாளர் பதவிக்கு ரூ.2,25,937 வழங்கப்படும்
எப்படி விண்ணப்பிப்பது..?
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.ippbonline.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
Read more ; அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பலாத்காரம்.!! – அண்ணாமலை கடும் கண்டனம்