fbpx

மியான்மருக்கு உதவிகளை வழங்கிய இந்தியா!. 15 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!

India provides aid: மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் நேற்று நண்பகலில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. மியான்மர் நாட்டின் நிலநடுக்க நகரமாக கருதப்படும் மண்டலே நகரத்தில் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து 6.4 ரிக்டரில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 730-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து மியான்மரில் நேற்று நள்ளிரவு 11.56 மணிக்கு மீண்டும் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு 15 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியது. இந்திய விமானப்படை விமானம் மூலம் 15 டன் நிவாரணப் பொருட்கள் மியான்மருக்கு வெளியுறவுத்துறை அனுப்பி வைத்தது.

Readmore: 30 ஆண்டுகளுக்கு முன் உங்க நகரம் எப்படி இருந்தது தெரியுமா?. கூகுள் மேப்ஸில் இந்த பட்டனை அழுத்தினால் பார்க்கலாம்!

English Summary

India provides aid to Myanmar! Sending 15 tons of relief materials!

Kokila

Next Post

100 நாள் வேலையை ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் பாஜக..!! சம்பளத்தை விடுவிக்க பணமில்லையா..? அல்லது மனமில்லையா..? கொந்தளித்த CM ஸ்டாலின்..!!

Sat Mar 29 , 2025
Chief Minister M. Stalin has accused the BJP government of trying to abolish the 100-day work plan.

You May Like