fbpx

இந்தியா vs இலங்கை..!! ரோகித்தின் 250-வது போட்டி..!! இம்முறையும் கோப்பையை தட்டிச் செல்வாரா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்து வளர்ந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த 2007 முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக முதல் முறையாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். இதுவரை 249 ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடியுள்ள நிலையில், இன்று இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதன் மூலமாக சர்வதேச 250-வது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறார். அதோடு 450ஆவது சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.

இதுவரையில் ரோகித் 27 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது 28-வது ஆசிய கோப்பை போட்டியில் விளையாடியுள்ளார். இதுவரையில் 27 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் 936 ரன்கள் எடுத்துள்ளார். இப்போட்டியில் 33 ரன்கள் எடுத்தால் சச்சின் டெண்டுல்கரின் ஆசிய கோப்பை 971 ரன்கள் சாதனையை முறியடிப்பார். சச்சின் 23 போட்டிகளில் விளையாடி 971 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இதற்கிடையே, ஒரு கேப்டனாக ரோகித் சர்மா ஒரு முறை ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியுள்ளார். கடந்த 2018இல் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடந்தது. இதில், முதலில் ஆடிய வங்கதேசம் 222 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 223 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எனினும், வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இன்று நடக்கும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ரோகித் சர்மா 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியா 7 முறை ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியுள்ளது. இலங்கை 6 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

திரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு…! பதைபதைக்கும் வீடியோ…!

Sun Sep 17 , 2023
சமீபகாலமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, என வயது வித்யாசம் பார்க்காமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்துள்ளனர். இதில் நன்றாக இருப்பவர்கள் திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வந்து கொன்டே தான் இருக்கிறது. அவ்வகையில் ஜிம்மில் இளைஞர் டிரெட்மில்லில் ஓடும் போது திடீரென சரிந்து விழுந்த வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like