ரோஹித் சர்மா தலைமையில் ஆனா 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
இலங்கையில் நடைபெறும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் இலங்கை அணிகள் கலந்துகொள்கின்றன.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகிய 17 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
காயத்திலிருந்து மீண்ட ராகுல், ஷ்ரேயஸ் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் மூலம் ஒரு நாள் போட்டியில் திலக் வர்மா அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில்லுக்கு அணியில். இடம்பெற்றுள்ளார். ஸ்டாண்ட் பை வீரராக சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.