fbpx

இந்தியா To பாரத்..!! எந்த ஆவணங்களும் செல்லாது..!! மீண்டும் வரிசையில் நிக்கணும்..!! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா..?

இந்தியாவின் பெயரை பாரத குடியரசு என்று மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. நேற்றில் இருந்து இந்தியா முழுக்க விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டத்தை சீர்திருத்தி இந்தியா என்பதை நீக்கி பாரத் என்பதை பயன்படுத்த முடிவு எடுக்கப்படலாம்.

மத்திய பாஜக அரசு இதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாரத குடியரசுத் தலைவர் என குடியரசுத் தலைவர் மாளிகை அழைப்பிதழ் அளித்துள்ளதும் இந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்ட தொடர் நடைபெறவுள்ளது. இதில், பாரத குடியரசு என மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 18 – 22 வரை இந்த சிறப்பு கூட்டம் நடைபெறும். இந்த சிறப்பு கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் தான், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (செப்.6) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவை பாரத் என பெயர் மாற்றினால் என்ன நடக்கும்..?

* இது உங்கள் அனைத்து ஆவணங்களையும், நாணயங்களையும் செல்லாததாக்கும்.

* ஆதார் தொடங்கி இந்தியா என்ற பெயர் உள்ள ஆவணங்களான பாஸ்போர்ட் வரை எல்லாம் செல்லாததாகும்.

* இந்த ஆவணங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

* அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை உங்களை வரிசையில் நிற்க வைக்கும். DEMONETISATION சமயத்தில் நீங்கள் செய்ததைப் போன்ற அலுவலகங்கள் முன் நிற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

* இது கோடிக்கணக்கான வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கும்.

* 140 கோடி இந்தியர்களின் புதிய ஆவணங்களை மீண்டும் உருவாக்கும் நேரத்தை ஏற்படுத்தும்.

* ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களின் பெயர்கள் மாறும். இதனால் அங்கே உள்ள பழைய ஆவணங்களின் பெயர்கள் மாறும்.

* பல கோப்புகள் மொத்தமாக செல்லாமல் ஆகும்.

* சர்வதேச அரங்குகளில் மீண்டும் பாரத் என்ற பெயரை பிராண்ட் செய்ய வேண்டும். முதலீட்டு ரீதியாக இது பாதிப்பை ஏற்படுத்தும்.

* அரசு அலுவலகங்களில் ஊழலைச் அதிகரிக்கும். ஆவணங்களில் பெயர்களை மாற்ற வரும் மக்களிடம் லஞ்சம் வாங்க வாய்ப்புகள் உள்ளன.

* பாரத் என்ற பெயரை மாற்றும் பட்சத்தில் வெளிநாட்டில் படிக்கும் இந்திய பாஸ்போர்ட் கொண்டவர்கள் அதிகம் சிரமத்திற்கு உள்ளாவார்கள். இதனால் தொடக்கத்தில் இந்தியா என்ற பெயர் சில காலம் அமலில் இருக்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகலாம்.

Chella

Next Post

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்... 100-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

Wed Sep 6 , 2023
பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Armourer, Control Room Operators பணிகளுக்கு 107 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17,000 முதல் […]

You May Like