இந்திய ராணுவ தளவாடங்கள் வெளிநாடுகளை பெரிதும் சார்ந்து இருக்கிறது. ராணுவ தளவாட இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8 சதவீதமாக இருக்கிறது. இந்நிலையில், பாதுகாப்புத் துறையில் சுயசார்பை எட்ட இலக்கு நிர்ணயித்து இந்தியா பயணித்து வருகிறது. இதுதொடர்பாக ராணுவ மேஜர் ஜெனரல் வி.கே. சர்மா கூறுகையில், “தற்போது இந்திய ராணுவம் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி முதல் ரூ.8,000 கோடி வரையில் குண்டுகளை கொள்முதல் செய்து வருகிறது.
ஏற்கெனவே வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 10 சதவீத அளவிலேயே குண்டுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 2025-26ஆம் நிதியாண்டு முதல் அந்த இறக்குமதியும் நிறுத்தப்படும். இனி இந்திய ராணுவம் தனக்குத் தேவையான குண்டுகளை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யும்.
தயாரிப்பு செலவு மிகுந்த குண்டுகள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும். தற்போது இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் வெடிபொருள் தயாரிப்பில் இறங்கியுள்ளன. இதனால், இந்தியா விரைவிலேயே வெடிபொருள் தயாரிப்பில் சர்வதேச சந்தையாக மாறும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Read More : 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது..? மாணவர்கள் எதிர்பார்ப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!