யுவான் வாங் 5 என்னும் சீனாவின் உளவுக் கப்பலை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால்; நம் அண்டை நாடான இலங்கை நோக்கி வந்து கொண்டிருக்கும் சீனாவின், ‘யுவான் வாங் 5′(Yuan Wang 5) என்ற உளவுக் கப்பல், வரும் 22 வரை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. எலக்ட்ரானிக் வார்பேர்’ என்றழைக்கப்படும் நவீன போர் தொழில் நுட்பங்கள் உள்ளன. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் போது, முதலில் அவர்களின் இணையம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை முடக்குவது வழக்கம். அதற்கு தேவையான அனைத்து நவீன கருவிகளும் இந்த உளவு கப்பலில் உள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ISRO-வின் ராக்கெட் ஏவுதளம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையம் மற்றும் நம் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் அந்த உளவுக் கப்பல் சேகரித்துச் செல்லக் கூடிய அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடுமையான எதிர்ப்பை தெரிவித்தும், சீன உளவுக் கப்பல் வருகையை இலங்கை தடுக்கவில்லை. உயர் தொழில்நுட்ப சீன ‘உளவு’ கப்பலை தனது கடற்பகுதியில் நிறுத்த இலங்கை அனுமதித்ததை அடுத்து எழும் சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.