fbpx

ஒரே நாளில் ஹாட்ரிக் தங்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா!… ஸ்குவாஷ் வில்வித்தையில் அசத்திய வீரர், வீராங்கனைகள்!

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றன. 12 வது நாளான நேற்று இந்தியா ஹாட்ரிக் தங்கங்களை வென்று அசத்தியது. நேற்றைய நிலவரப்படி 3 தங்கம் 1 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களை பெற்று மொத்தம் 86 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 4 வது இடத்தை தக்க வைத்துள்ளது. இந்த விளையாட்டு திருவிழாவில், இந்தியா இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி மற்றும் 33 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. நேற்றைய போட்டியில் முதல் தங்கத்தை வில்வித்தை போட்டியில் தொடங்கியது.

மகளிர் வில்வித்தை போட்டியில் ஜோதி வெண்ணம், அதிதி சுவாமி & பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, காம்பௌண்ட் குழு பிரிவில் ‘தங்கம்’ வென்றது. இவர்களில், ஜோதி வெண்ணம் முன்னதாக காம்பௌண்ட் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஸ்குவாஷ் விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில், மலேஷியாவின் ஐஃபா அஷ்மான் – முகமது சியாஃபிக் இணையை 11-10, 11-10 என நேர் செட் கணக்கில் வீழ்த்திய இந்தியாவின் தீபிகா பல்லிகல் – ஹரீந்தர்பால் சிங் இணை, இந்தியாவுக்காக 2வது தங்கப் பதக்கத்தை வென்றது.

மூன்றாவதாக ஆடவருக்கான வில்வித்தை விளையாட்டுகளின், காம்பௌண்ட் குழு பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஓஜஸ் டியோடேல், அபிஷேக் வர்மா மற்றும் பிரத்மேஷ் ஜவகர் அணி, தென் அணியை வீழ்த்தி, தங்கப் பதக்கங்களில் 3 வது தங்கத்தை வென்று ஹாட்ரிக் தங்கத்திற்கு வழிவகுத்தது. அடுத்து நடைபெற்ற ஸ்குவாஷ் விளையாட்டின் ஆடவர் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில், மலேஷியாவின் இயான் யோவ்விடம் 9-11, 11-9, 11-5, 11-7 என செட் கணக்கில் தோல்வியடைந்த இந்தியாவின் நட்சத்திர ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல், வெள்ளிப் பதக்கத்தை வென்றார். , ஸ்குவாஷ் ஆடவர் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்று சவுரவ் கோஷல் சாதனை படைத்துள்ளார். மகளிருக்கான மல்யுத்த போட்டிகளில், 53 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் 19 வயதேயான ஆன்டிம் பங்கல் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

Kokila

Next Post

இறுதி நாள் நெருங்கியாச்சு..!! இன்றே இந்த வங்கி வேலையை முடிச்சிருங்க..!! இல்லனா சிக்கல் உங்களுக்கு தான்..!!

Fri Oct 6 , 2023
நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாது. இனி 2000 நோட்டுகள் உங்கள் கையில் இருந்தால் உடனே வங்கிக்கு சென்று மாற்றிக்கொள்ளுங்கள். அக்.7ஆம் தேதிதான் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி நாள் ஆகும். நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ஆம் தேதி உத்தரவிட்டது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் […]

You May Like