fbpx

நேபாளிடம் அடி வாங்கிய அதே வேகப்பந்து வீச்சாளர்களுடன் உலக கோப்பையில் களமிறங்கும் இந்தியா..! வருத்தமளிக்கும் இந்திய அணி தேர்வு..

ஆசிய கோப்பை தொடரில் நேற்றைய தினம் இந்தியா நேபாளம் அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேபாள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றாலும், இந்தியா அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மீது விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர பிந்து வீச்சாளராக தேர்ந்தெடுக்கப்படும் சிராஜ் ரன்களை வாரி வழங்கினார், மேலும் ஷர்துல் தாக்கூர் மீதும் விமர்சனங்கள் எழுந்தது.

சிறு அணிகளுடன் இப்படி பந்துவீச்சில் ரன்களை கொடுக்கும் வீரர்கள் பெரிய அணியுடன் எப்படி செயல்படுவார்கள் என்று விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் அதே பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைகான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

உலகக்கோப்பை 2023 இந்தியா அணி : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர்,கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா(துணை கேப்டன்), ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, முகமது சிராஜ், பும்ரா, ஷர்துல் தாகூர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், அக்சர் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அணி தான் ஏமாற்றம் அளிப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பழம்பெரும் கிரிக்கெட் ஜாம்பவான் க்ரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஷர்துல் தாகூர் ஆசியா கோப்பையில் இடம்பெற்றதையே விமர்சித்து வந்தார், தற்போது அவரையும் உலகக்கோப்பை 2023 இந்தியா அணியில் சேர்த்துள்ளது பிசிசிஐ. மேலும் காயத்தில் இருந்து மீண்ட கே.எல்.ராகுல் இதுவரை ஒரு இன்டர்நேஷனல் போட்டியிலும் பங்குபெறவில்லை, ஆசிய கோப்பை லீக் ஆட்டத்திலும் இடம்பெறவில்லை, அவரையும் அணியில் சேர்த்துள்ளது.

அதுபோல் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ராவை தவிர வெறும் யாரும் இதுவரை சிறப்பாக செயல்படவில்லை, இருந்த போதிலும் நேபளத்திற்கு எதிராக அதிக ரன்களை வாரி இறைத்த முகமது சிராஜ் போன்ற வீரர்களும் தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட அஸ்வின், திலக் வர்மா போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! கிருஷ்ண ஜெயந்தி..!! தமிழ்நாட்டில் நாளை பொதுவிடுமுறை..!!

Tue Sep 5 , 2023
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் தேய்பிறை அஷ்டமி திதியில் அவதரித்தவர் பகவான் கிருஷ்ணன். கிருஷ்ண ஜெயந்தி இந்தாண்டு செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பகவான் கிருஷ்ணரின் 5250-வது பிறந்தநாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அவர் சிறைச்சாலையில் பிறந்திருந்தாலும், வளர்ந்தது கோகுலத்தில் தான். இதனால் கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக […]

You May Like