ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இணை ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் அரை சதம் அடித்தார் (51) இவர் அடுத்தடுத்த 2 போட்டிகளில் அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் களம் இறங்கிய விராட் கோலி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். 25 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சூர்ய குமார் யாதவ் அரைசதம் அடித்து ரன்களை குவித்தார் (61) இவர் இந்தியா சார்பில் அதிக பட்ச ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது., ரிஷப் பண்ட்(3), ஹர்திக் (18) என இந்திய வீரர்கள் 186 ரன்கள் குவித்தனர்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. 8.4 ஓவரின் முடிவில் 42 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரெஸ்லி (0), கிரெய்க் எர்வின்(13), ரெகிஸ் சகாபாவா (0), சீன் வில்லியம் (11), சிக்கந்தர் ராசா (3)டோனி முனயோங்கா (5) என சொற்ப ரன்களே எடுத்து விளையாடி வருகின்றனர். 10 ஓவர்கள் முடிவில் 59 ரன்கள் எடுத்தது.
இந்தியாவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல்ஜிம்பாப்வே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா 34 ரன்களும், ரியான் பர்ல் 35 ரன்களும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். அடுத்தடுத்து களம் இறங்கிய வெலிங்டன், ரிச்சர்ட் தலா ஒரு ரன்னில் வெளியேறினர் 17.2 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களே எடுத்தது ஜிம்பாப்வே.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குரூப் 2 அரையிறுதிக்குள் பாகிஸ்தானும் இந்தியாவும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.