Agniveer Recruitment: இந்திய விமானப்படை (IAF) அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு 2024க்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான agnipathvayu.cdac.in மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு செயல்முறை ஜனவரி 7, 2025 இல் தொடங்கி, ஜனவரி 27, 2025 அன்று முடிவடையும். அக்னிவீர்வாயு தேர்விற்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி : 12-ம் வகுப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்று வருட பொறியியல் பிரிவில் பட்டயச்சான்று பெற்றவர்கள் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது, அறிவியல் அல்லாத 12-ஆம் வகுப்பு பயின்றவர்கள் ஆங்கிலப்பாடப்பிரிவில் 50 சதவீதமதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உடற் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை. ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி- 27-01-2025 ஆகும். பதிவு செய்யும் போது விண்ணப்பக் கட்டணம் ரூ. 550 + ஜிஎஸ்டி. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது இணைய வங்கி மூலம் பணம் செலுத்தலாம்.
Readmore: “நயன்தாரா சிதறு தேங்காய் பிச்சைக்காரி…” வெளுத்து வாங்கிய சுச்சி…