fbpx

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… இந்திய விமானப்படையில் கை நிறைய சம்பளம்!! உடனே அப்ளே பண்ணுங்க..

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா..? சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய விமானப்படையின் அக்னிவீர் பிரிவில், இசைக்கலைஞர் பிரிவிற்கு, ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியில் உமா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், இந்திய விமானப்படையால், அக்னிவீர் வாயு ராணுவத்தில், இசைக் கலைஞர் பிரிவிற்கு, பெங்களூருவில் அமைந்துள்ள 7வது ஏர்மேன் தேர்வு மையத்தில், வரும் ஜூலை 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை இந்திய ராணுவம் மூலம் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு திருமணமாகாத விருப்பமுள்ள ஆண், பெண் இருபாலரும் வருகிற ஜூன் 5ம் தேதிக்குள்https://agnipathvayu.cdac.inஎன்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் 2.1.2004 முதல் 2.7.2007 தேதிக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இசைக்கல்வியில் தேர்ச்சி பெற்றவராகவும், இந்திய பாரம்பரிய கருவிகளில் ஏதேனும் ஒரு இசை கருவியை வாசிப்பதில் வல்லுநராக இருக்க வேண்டும்.

இத்தேர்வு குறித்த விவரங்களை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04286 -222260 மூலமோ தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தைச் சோர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் இத்தேர்வில் பங்கு பெற்று பயனடையுமாறு ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

Read more ; உங்களுக்கு ஒரு சேலஞ்ச்! இந்த படத்தில் இருக்குற 3 வித்தியாசங்கள 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

English Summary

English summary

Next Post

சமையல் பருப்புகளின் ஊட்டச்சத்து நன்மைகளை எவ்வாறு மேம்படுத்தலாம்? ICMR வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!!

Sun Jun 2 , 2024
English summary

You May Like