fbpx

12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு செம வாய்ப்பு…! 50 % மதிப்பெண் இருந்தால் போதும் என அறிவிப்பு…!

இந்திய விமானப்படையில்‌ (Medical Trade Assistant) தேர்விற்கான முகாம்‌ பிப்ரவரி 01 முதல்‌ 08 -ம்‌ தேதி வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இந்திய விமானப்படையில்‌ (Medical Trade Assistant) தேர்விற்கான முகாம்‌ பிப்ரவரி 01 முதல்‌ 08 -ம்‌ தேதி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில்‌ அறிவியல்‌ பிரிவில்‌ 12-ஆம்‌ வகுப்பு படித்தவர்கள்‌ மற்றும்‌ மருந்தியலில்‌ டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம்‌ பெற்றவர்கள்‌ பங்கேற்கலாம்‌. மேலும்‌ 12ம்‌ வகுப்பில்‌ குறைந்தபட்சம்‌ 50% மதிப்பெண்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. திருமணமாகாத இளைஞர்கள்‌ 27.06.1999 முதல்‌27.06.2004 தேதிக்குள்ளும்‌, திருமணமான இளைஞர்கள்‌ 27.06.1999 முதல்‌27.06.2002 தேதிக்குள்ளும்‌ பிறந்திருக்க வேண்டும்‌.

குறைந்தபட்சம்‌ 152.5 செ.மீ உயரம்‌ உடையவராக ஒருத்தல்‌ வேண்டும்‌. தகுதியுடைய இளைஞர்கள்‌ எழுத்துத்‌ தேர்வு மற்றும்‌ உடற்தகுதி அடிப்படையில்‌ தேர்வு செய்யப்படுவர்‌. மேலும்‌, விவரங்களுக்கு www.airmenselection.cdac என்ற இணையதளம்‌ வாயிலாகவோ அல்லது தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தை அலுவலக வேலைநாட்களில்‌ நேரில்‌ அணுகியோ அறிந்து கொள்ளலாம்‌. தருமபுரி மாவட்டத்தைச்‌ சாந்த தகுதி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ இம்முகாமில்‌ பங்கு பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஆதார் விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்..? முழு விவரம் இதோ..

Thu Jan 26 , 2023
ஆதார் என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது.. மத்திய மற்றும் மாநில அரசு சேவைகள் அல்லது நிதி சேவைகளுக்கு தேவையான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் தேவையான தகவல்கள் எப்போதும் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) வழிகாட்டுதல்களின்படி, பயனர் அதை இரண்டு முறை மட்டுமே புதுப்பிக்க வேண்டும். இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பான […]
ஆதாரில் இப்படி ஒரு வசதி இருக்கா..? இனி ஈஸியா வேலை முடிஞ்சிரும்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like