இந்திய ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம். சென்னை Officers Training Academy (OTA) காலியாக உள்ள 61th Short Service Commission (Tech) Men (Oct 2023) and 32st Short Service Commision (Tech) Women Course (Oct 2023) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 191 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பணிக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் கல்வி தகுதியாக டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த பணிக்கு குறைந்தபட்சம் ரூ.59,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் 09.02.2023 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி பயன்படுத்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
For More Info: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/DETAILED_NOTIFICATION_FOR_SSC_T_-61.pdf