fbpx

இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கம் வென்று அசத்தல்..!! எந்த போட்டியில் தெரியுமா..?

ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் ‘வால்ட்’ பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

உஸ்பெகிஸ்தானில், ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. பெண்களுக்கான ‘வால்ட்’ பிரிவு பைனலில் இந்தியாவின் தீபா கர்மாகர், 13.566 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

இதற்கு முன் ஆஷிஸ் குமார் (2015, ‘புளோர்’), பிரனதி நாயக் (2019, 2022, ‘வால்ட்’) வெண்கலம் வென்றிருந்தனர். தவிர இது, ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் தீபா கர்மாகர் கைப்பற்றிய இரண்டாது பதக்கம். 2015ல் வெண்கலம் (‘வால்ட்’) வென்றிருந்தார். தென் கொரியாவின் கிம் சன் ஹியாங் (13.466 புள்ளி), ஜியோ கியோங் பயல் (12.966) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.

இருப்பினும் தீபா கர்மாகர், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை. ‘ஆல்-ரவுண்ட்’ பிரிவில் (46.166 புள்ளி) இவர், 16-வது இடம் பிடித்தார். 3-வது இடம் பிடித்த பிலிப்பைன்சின் எம்மா மாலாபுயோ (50.398 புள்ளி) பாரிஸ் ஒலிம்பிக் வாய்ப்பை தட்டிச் சென்றார்.

Read More : குடிமகன்களுக்கு குட் நியூஸ்..!! இனி பணம் மிச்சமாகும்..!! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!!

English Summary

Indian athlete Deepa Karmakar has won gold in Asian Gymnastics ‘Vault’ category.

Chella

Next Post

அதிர்ச்சி..!! மண்ணில் புதைந்த 670 பேர்..!! சிகிச்சை கூட தர முடியல..!!பயங்கர நிலச்சரிவால் மக்கள் தவிப்பு..!!

Mon May 27 , 2024
670 people lost their lives in a landslide in Papua New Guinea. Information related to this UN. The organization has officially announced.

You May Like