fbpx

நிலவில் சொந்தமான நிலம் வாங்கிய இந்திய தொழிலதிபர்..!! உங்களாலும் வாங்க முடியுமா..? யாரை அணுக வேண்டும்..?

நிலவில் சொந்தமாக இடம் வாங்க முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால், சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியதுமே ஜம்மு காஷ்மீரை சேர்ந்த நபர் ஒருவர் நிலவில் சொந்தமாக இடம் வாங்கியுள்ளார். இது பற்றிய சுவாரஸ்ய தகவலை தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 3 விண்கலம் கால் பாதித்தது மனித குலத்தில் வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாகவே இந்தியா மட்டும் இன்றி சர்வதேச அளவிலும் நிலவு குறித்த செய்திகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஒரு தொழில் அதிபர், நிலவில் சொந்தமாக ஒரு இடத்தை வளைத்து போட்டுள்ளாராம்.

நிலவில் , Tract 55-Parcel 10772 லாகஸ் ஃபெலிசிடாடிஸ் (மகிழ்ச்சியின் ஏரி) என்ற இடத்தில் தான் தனக்கு சொந்தமான ஒரு இடத்தை வாங்கி போட்டுள்ளாராம் தொழிலதிபர் ரூபேஷ் மேசன் (49). இவர், ஜம்மு காஷ்மீரில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். சந்திரயான் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து வரலாற்று சாதனை படைத்த 2 தினங்கள் கழித்து நிலவில் இடத்தை வாங்கி போட்டுள்ளார். ஏன் நிலவில் ஒரு இடத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது என்பது குறித்து கேட்டபோது, நிலவில் என்னதான் இருக்கிறது என்பது தொடர்பான மனிதனின் ஒரு ஆர்வம் தான் இதற்கான முதல் தூண்டுகோல் என்றார்.

நிலவில் என்ன இருக்கிறது என்ற தேடலின் ஒரு பிரதிபலிப்பாக அங்கு ஒரு இடத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு காரணம் என்றும் கூறியிருக்கிறார். நியூயார்க்கில் உள்ள லுனார் ரிஜிஸ்டரி அதிகாரப்பூர்வமாக நிலத்தை வாங்கியதற்கான சான்றிதழை ஆகஸ்ட் 25ஆம் தேதி மேசனுக்கு வழங்கியுள்ளது. நிலவில் இப்படி நிலம் வாங்கியிருப்பது இதுதான் முதல் முறை என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் உள்பட 675 பிரபலங்கள் நிலவு மட்டுமின்றி பிற கிரகங்களிலும் நிலத்தை வாங்கியுள்ளதாக மேசன் சொல்லியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், “பருவ நிலை மாற்றம் காரணமாக பூமியில் ஒரு நிச்சயமில்லாத சூழல் நிலவுகிறது. இது போன்ற தருணங்களில் மனிதர்களுக்கு நிலவுதான் ஒரு அடைக்கலம் நாடும் இடமாக கூட அமையலாம்” என்றார். சரி இப்போது உங்கள் மனதிலும் ஒரு கேள்வி எழலாம். என்னாலும் நிலவில் ஒரு இடத்தை வாங்க முடியுமா? நீங்கள் அப்படி நிலவில் இடத்தை வாங்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது தொழில் அதிபர் மேசனை போல லுனார் ரிஜிஸ்டரி போன்ற அமைப்புகளிடம் போய் வாங்கிக் கொள்ள முடியும்.

தற்போது நிலவின் Lacus Felicitatis பகுதியில் ஒரு ஏக்கர் இடம் $29.07 ஆக விற்பனையாகிறதாம். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.2,405 ஆகும். ஆனால், இடம் கிடைத்து விடாது. நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். என்னதான் நிலவில் இடத்தை வாங்கி போட்டு இருப்பதாக பல்வேறு விதமான கதைகளை சொன்னாலும் 1967ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வெளிப்புற விண்வெளி ஒப்பந்தத்தின் படி, எந்த ஒரு நாடோ அல்லது நபரோ சட்டப்பூர்வமாக சொந்தமாக செயற்கைக்கோள் அல்லது கிரகத்திற்கோ உரிமை கொண்டாட முடியாது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உள்பட 110 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

இந்த விஷயத்தை நீங்கள் பின்பற்றுகிறீர்களா, அப்படி என்றால் அந்த விஷயத்தில் நீங்கள் தான் கில்லி….! அப்போ இனிமே ஜாலிதான் போங்க…..!

Sun Sep 3 , 2023
இன்று பலருக்கும் படுக்கை அறையில், அதிலும், உடலுறவில் சரியான ஆற்றலுடன் செயல்பட முடியாமல் போவதுண்டு. அது பற்றிய காரணங்களை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். ஒருவருடைய பாலியல் வாழ்க்கை, அவருடைய ஒட்டுமொத்த மன மற்றும் உடல் உணர்ச்சி, ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது. படுக்கை அறையில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், நிறைவான உடலுறவு அனுபவிக்கவும், அவர் செய்யக்கூடிய பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்வதும் பிரச்சனை தான், […]

You May Like