fbpx

மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட இந்திய கார்கள் மோசமான பாதுகாப்பு கொண்டவை!… Global NCAP பாதுகாப்பு அமைப்பு!

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுவரும் கார்களில் மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட பிரபலமான கார்கள் மோசமான பாதுகாப்பு கொண்டவையாக உள்ளதாக Global NCAP பாதுகாப்பு அமைப்பு நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக கார்கள் கணிசமாக அதிக சக்தி வாய்ந்ததாக மாறி, மக்களின் வசதிக்காக பலதரப்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. அந்தவகையில் கார்களின் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானது. அதாவது ஒவ்வொரு கார்களிலும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. என்னதான் கார்களின் திறன், டெக்னாலஜி போன்றவை மேம்பட்டாலும் பாதுகாப்பு வசதிகளும் மேம்படவேண்டும். இந்த நிலையில் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுவரும் கார்களில் மக்கள் மத்தியில் சிறப்பாக விற்பனையானாலும் மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட கார்கள் மோசமான பாதுகாப்பு மதிப்பீட்டை கொண்டவையாக உள்ளதாக Global NCAP பாதுகாப்பு அமைப்பு நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

மாருதி சுசுகி வேகன்ஆர் (1 ஸ்டார்): இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் கலக்கி வரும் மாருதி சுசூகி நிறுவனத்தின் இந்த பிரபல சிறிய ஹாட்ச்பேக் மாடலான வேகன்R பாதுகாப்பு சோதனையில் வெறும் 1 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஒரு ஸ்டார்களை கூட பெறவில்லை. Hyundai Grand i10 Nios (2 ஸ்டார்): இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் நிறுவனமாக இருக்கக்கூடிய ஹூண்டாய் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடலாக உள்ள இந்த க்ராண்ட் ஐ10 Nios பாதுகாப்பு சோதனையில் 2 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது. 15 புள்ளிகளுக்கு இந்த கார் 7.05 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.

Maruti Suzuki Alto K10 (2 ஸ்டார்):சிறிய ஹாட்ச்பேக் கார்களில் மீண்டும் சிறந்த ஒரு விற்பனை மாடலாக இருக்கும் ஆல்டோ வெறும் 2 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஒரு மதிப்பெண் கூட பெறவில்லை. Maruti Suzuki Swift (2 ஸ்டார்):ஹாட்ச்பேக் கார்களில் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் ஸ்விப்ட் காரும் ஒன்று. இந்த கார் பாதுகாப்பு சோதனையில் 16.23 மதிப்பெண்களுக்கு வெறும் 7.08 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இந்த கார் 5 ஸ்டார்களுக்கு 2 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது.

Hyundai Creta (3 ஸ்டார்):இந்தியாவின் சிறந்த விற்பனை SUV மாடலாக இருக்கக்கூடிய ஹூண்டாய் கிரேட்டா இந்த பட்டியலில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த Global NCAP சோதனையில் 3 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது. ​Kia Seltos (3 ஸ்டார்):ஹூண்டாய் கிரேட்டா சார்ந்து உருவாக்கப்பட்ட இந்த செல்டோஸ் அதே 3 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த கார்களின் கட்டமைப்பு சரிவர இல்லாத காரணத்தால் இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. Renault Kwid (1 ஸ்டார்): பட்டியலில் ரெனால்ட் நிறுவனத்தின் சிறிய ஹாட்ச்பேக் வகை காரான கிவிட் உள்ளது. இந்த கார் பாதுகாப்பில் குறைபாடு உள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதுகாப்பில் 1 ஸ்டார் மட்டுமே பெற்றுள்ளது.

Kokila

Next Post

குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது!… கணவருக்கும் விடுமுறை அளிப்பது அவசியம்! ஐகோர்ட் கிளை!

Wed Aug 23 , 2023
மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கும் விடுமுறை வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உள்ளது. பெண்களுக்கு பிரசவ காலத்தில் சம்பளத்துடன் இந்த விடுப்பு வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்கள் தங்கள் பெண் பணியாளர்களுக்கு சில மாதங்கள் மட்டும் விடுப்பு அளிக்கின்றன. இந்த நிலையில் மனைவியின் பிரசவத்தின்போது தனக்கு விடுமுறை வழங்கவில்லை என தென்காசி […]

You May Like