உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரம் பேரிடர் பாதிப்புக்குள்ளான வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் 570-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று மக்களை சந்தித்த நிலையில், ஜோஷிமத் நகரம் வாழ்வதற்கு பாதுகாப்பில்லாத நகரமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜோஷிமத் விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் சார்பில் உயர்மட்டக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. உத்தரகாண்ட் முதலமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.