fbpx

Work From Home முறையை அதிகம் விரும்பும் இந்திய ஊழியர்கள்..!! ஏன் தெரியுமா..? கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்..!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் Work From Home என்ற முறை இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அலுவலகம் சென்று பணிபுரியும் நிலை அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஊழியர்களின் பெரும்பாலான மனநிலை Work From Home என்பது தான் என்றும் அதனால் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருக்கிறார்கள் என்றும் கருத்துக் கணிப்பு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனியார் நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பில் 17 நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேர் தொழிலாளர்களை ஆய்வு செய்து கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், பத்தில் ஏழு பேர் தாங்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை விரும்புவதாகவும் அதில் தங்களுக்கு கூடுதல் வசதி கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.

Work From Home முறையை அதிகம் விரும்பும் இந்திய ஊழியர்கள்..!! ஏன் தெரியுமா..? கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்..!!

Work From Home-இல் வேலை செய்யும்போது எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் வீடு மற்றும் அலுவலகம் இடையே மாறி மாறி சென்று வேலை செய்வது தங்களுக்கு அதிக சோர்வை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் சுமார் 70 சதவீத ஊழியர்கள் புதிய வேலை தேடுவார்கள் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கொரோனா மீண்டும் பரவி வருவதை அடுத்து வொர்க் ப்ரம் ஹோம் முறையை அமல்படுத்த பல நிறுவனங்கள் ஆலோசித்து கொண்டிருக்கும் நிலையில் ஊழியர்களின் மன நிலையும் வொர்க் ப்ரம் ஹோம் முறையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் எதிர்காலத்தில் ஒரு சில துறைகள் தவிர மற்ற அனைத்து துறைகளிலுமே வொர்க் ப்ரம் ஹோம் முறையை அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

கடனை திருப்பிக் கேட்டது ஒரு குத்தமா..? கூலிப்படை ஏவி டெய்லரை குத்திக்கொன்ற டிரைவர்..!!

Fri Jan 13 , 2023
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). இவர், டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி இரவு வழக்கம்போல கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், […]

You May Like