இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பில்லியரான பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவருடைய மனைவி ராதிகா ஓஸ்வால் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் ஒரு பிரம்மாண்டமான வீட்டை விலைக்கு வாங்கியிருக்கின்றனர்.
4.3 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கின்ற பில்லா வரி என்ற வீடு ஜிங்ஜின்ஸ் கிராமப்புறத்தில் அமைந்திருக்கிறது இங்கிருந்து அல்ப்ஸ் பனி மலைகளின் உச்சியை ரசிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த வீட்டின் விலை சுமார் 1649 கோடி ரூபாய் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. உலகின் டாப் 10 விலை உயர்ந்த வீடுகளில் இதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது.
இந்த வீட்டை இதற்கு முன்னர் கிரேக்க தொழிலதிபரான அரிஸ்டாட்டில் ஒனாசிசின் மகள் கிறிஸ்டினா ஒனாஸிஸ் வைத்திருந்தார்என்று கூறப்படுகிறது. அவரிடம் இருந்து வாங்கியுள்ள ஓஸ்வால் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்த வீட்டை தங்களுக்கு ஏற்றவாறு வடிவமைப்பு செய்து வருகின்றனர்.
ஓபராய் உதய் விலாஸ் லீலர் ஹோட்டல் போன்ற கட்டங்களை வடிவமைப்பதற்காக அறியப்படும் ஜெப்ரி வில்க்ஸ் இந்த வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்
.
ஒஸ்வால் ஆக்ரோ மில்ஸ், ஓஸ்வால் கிரீன் டேக் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனர் அபே ஓஸ்வால் கடந்த 2016 ஆம் ஆண்டு மரணமடைந்தார் இவருடைய மகன் பங்கஜ் ஓஸ்வால் தற்சமயம் ஓஸ்வால் குடும்பத்தை வழிநடத்தி வருகிறார் இவர் பெற்றோர் கெமிக்கல்ஸ் ரியல் எஸ்டேட் ,உரங்கள் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
அதோடு பங்கஜ் ஒஸ்வால் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். ராதிகா பங்கஜ் தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் 24 வயதாகும் வசுந்தரா ஓஸ்வால் பிஆர்ஓ இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்டின் எக்ஸிக்யூடிவ் ஜெனரலாகவும் ,ஆக்சிஸ் மினரல்ஸின் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார்.
19 வயதாகும் ரிதி ஓஸ்வால் லண்டனில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர்கள் இருவரின் முதல் எழுத்துக்களை கொண்டு தான் புதிதாக வாங்கப்பட்டுள்ள ஆடம்பர வீட்டிற்கு வில்லா வரி என்று பெயரிடப்பட்டிருக்கிறது.