fbpx

அரபிக் கடலில் 173 கிலோ போதை பொருட்களுடன் ஒரு இந்திய மீன்பிடி படகு பறிமுதல்…!

இந்தியக் கடலோரக் காவல்படை, குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியில், அரபிக் கடலில் 173 கிலோ போதைப்பொருட்களுடன் ஒரு இந்திய மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை வழங்கிய குறிப்பிட்ட மற்றும் நம்பகமான உளவுத் தகவல்களின் அடிப்படையில், இந்தியக் கடலோரக் காவல்படை சந்தேகத்திற்கிடமான படகை இடைமறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், புலனாய்வுத் தகவல்களின் துல்லியத்தை உறுதிப்படுத்தியது, மீன்பிடி படகும் அதிலிருந்த இரண்டு பேரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு பாகிஸ்தான் மீன்பிடி படகு கணிசமான அளவு போதைப்பொருளுடன் தடுத்து வைக்கப்பட்டது உட்பட, கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியக் கடலோரக் காவல்படை மேற்கொண்ட பன்னிரண்டாவது நடவடிக்கையாகும் இது.

Vignesh

Next Post

ஐபிஎல் ஒளிபரப்பு விவகாரம்… தமன்னாவுக்கு சம்மன்… ஆஜராக அவகாசம் கோரி கடிதம்

Tue Apr 30 , 2024
Fairplay செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.இந்த நிலையில் சம்மன் தொடர்பாக ஆஜராக அவகாசம் கோரியுள்ளார் நடிகை தமன்னா. வழக்கின் விவரம்: கடந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் (viacom) பெற்றிருந்தது. அதேநேரத்தில், அந்த ஆண்டு மிகப் பிரபலமான செயலிகளில் ஒன்றாக விளங்கிய Fairplay செயலியில், IPL 2023 போட்டி சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டது. Fairplay செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் […]

You May Like