fbpx

’10-வது’ படிச்சிருந்தா போதும்.! இந்திய அஞ்சல் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு.! ₹.63,200/- வரை சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அஞ்சல் துறை வெளியிட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி இந்திய அஞ்சல் துறையில் ஓட்டுனர் பணிகளுக்காக 78 காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்தியா அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பில் சேர்வதற்காக தகுதியும் திறமையும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இலகு ரக மற்றும் கனரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகன உரிமம் காலாவதியாகாமல் இருக்க வேண்டும். வாகன ஓட்டுதலில் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும். இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மத்திய அரசு விதிகளின்படி ரூ.19,900 /- முதல் ரூ.63,200 /- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பில் சேர்வதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். மேலும் 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வயது வரம்பில் பொதுப் பிரிவினருக்கு 3 வருடம் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும் மத்திய அரசில் பணிபுரிந்தவர்களுக்கு 40 வயது வரை விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் சேர விருப்பம் உடைய நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தபால் மூலம் இணையதளத்தில் குறிப்பிட்ட முகவரியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 09.02.2024 ஆகும். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய indiaposts.gov.in என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Post

மணிப்பூர் - மும்பை...! இன்று முதல் ராகுல் காந்தி யாத்திரை...! 1,000 பேருடன் தொடங்க மாநில அரசு அனுமதி...!

Sun Jan 14 , 2024
இம்பாலில் 1,000 பங்கேற்பாளர்களுடன் ராகுல் காந்தி யாத்திரையை தொடங்க மாநில அரசு அனுமதியை வழங்கியதை அடுத்து இன்று யாத்திரை தொடங்க உள்ளது. மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார். இன்று முதல் மார்ச் 20 வரை இந்த யாத்திரை நடைபெறும். ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரையை மணிப்பூரில் உள்ள அரண்மனை மைதானத்தில் தொடங்க […]
ராகுல் காந்தியின் நடைபயணம் இன்றுடன் நிறைவு..!! மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு..!!

You May Like