fbpx

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி!… மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் அசத்தல்!

பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மகளிருக்கான 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய இந்த ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 5ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த ஹாக்கி தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா, தாய்லாந்து என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சிறப்பாக செயல்பட்டு தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது.

அந்தவகையில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான தென் கொரியா அணியை எதிர்கொண்டது. இதில், சலிமா மற்றும் வைஷ்ணவி வி பால்கே ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து இந்திய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற செய்தனர். இந்த போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து, இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஜப்பானை மீண்டும் எதிர்கொள்கியது இந்திய மகளிர் அணி.

Kokila

Next Post

சேஸிங் கிங் விராட் கோலி பிறந்தநாள்!… சதங்களை குவிக்கும் சாதனை நாயகனின் சிறப்பு தொகுப்பு!

Sun Nov 5 , 2023
சர்வதேச கிரிக்கெட் உலகில் அரசன் என்று ரசிகர்களால் போற்றப்படும் விராட் கோலியின் 35வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. காலாவதியாகி விட்டார் என்று விமர்சிக்கப்பட்ட பலர் அப்படியே காணாமலேயே போயிருக்கிறார்கள். விராட் கோலியும் அப்படி விமர்சிக்கப்பட்டார். 360 டிகிரி மைதானத்தைச் சுற்றி அடிக்கும் புதியவகை கிரிக்கெட் உலகில் அவருக்கு இடமில்லை என்றார்கள். எதற்காக இந்த அணியில் இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்கள். இப்போதும் அவர் 360 டிகிரி சுழன்று அடிப்பதில்லை. […]

You May Like