fbpx

இந்திய அணி வீரர்கள் நடுவர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்!… நடுவர் நிதின் மேனன் அதிர்ச்சி தகவல்!

இந்திய அணி வீரர்கள் அழுத்தம் கொடுப்பதாக, நடுவர் நிதின் மேனன் கூறியுள்ளார்.

இந்தியாவில் விளையாடும் போது, இந்தியா அணி வீரர்கள் நடுவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், அவர்கள் எப்போதும் போட்டியின் முடிவுகளை அவர்களுக்கு சாதகமாக பெற முயற்சி செய்கிறார்கள். ஆனால், நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் அவர்கள் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், வீரர்களால் ஏற்படும் அழுத்தத்தை தவிர மற்ற எந்த சூழ்நிலையையும் கையாளும் அளவுக்கு நான் வலிமையானவன் என்பது எனக்கு தெரியவந்துள்ளது. அது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்துள்ளது. உள்நாட்டில் இந்திய சர்வதேச நடுவர்களின் குழுவை வழிநடத்துவதும் ஒரு பெரிய பொறுப்பாகும்.

ஆரம்பத்தில் எனக்கு அதிக அனுபவம் இல்லை. ஆனால், கடந்த மூன்று வருடங்கள் நான் நடுவராக வளர உதவியது என்று நிதின் மேனன் கூறியுள்ளார். இதற்கிடையில், ஐந்து ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிதின் மேனன் நடுவராக பணியாற்ற உள்ளார். ஐசிசி அவரை ஐசிசி எலைட் பேனலில் சேர்த்துக் கொண்ட ஜூன் 2020 முதல் 15 டெஸ்ட், 24 ஒருநாள் மற்றும் 20 டி-20 சர்வதேசப் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார்.

Kokila

Next Post

ஜியோ வெல்கம் ஆஃபர்!... அனைவருக்கும் இலவச அன்லிமிடெட் டேட்டா சேவை!... அதிரவைத்த ஜியோ!

Mon Jun 19 , 2023
இந்தியாவில் ஜியோ 5ஜி சேவையின் உபயோகத்தை செய்வதற்காக சோதனை , இலவச அன்லிமிடெட் டேட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மொபைல் பயனர்கள் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நெட்ஒர்க் நிறுவனங்களின் இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், இன்டர்நெட் சேவையின் வேகத்தை அதிகரிக்கும் விதமாகவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அதன் 5ஜி சேவையை நாடெங்கும் பல மாநிலங்களில் விரிவுபடுத்தி வருகிறது. அந்தவகையில், ரிலையன்ஸ் ஜியோ தனது […]

You May Like