உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான அஸ்வின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித், ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரும், உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலருமான அஷ்வினுக்கு இந்திய ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர் மற்றும் 1 ஸ்பின்னருடன் களமிறங்க முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய அணியில் ஷமி, சிராஜ், உமேஷ், தாக்குர் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் இந்தியா களமிறங்குகிறது. ஆஸ்திரேலியா இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
அஸ்வினை விட ஜடேஜா நல்ல பேட்ஸ்மேன் என்பதாலும், அணியின் ஒரே இடது கை பேட்ஸ்மேன் என்பதாலும், அவருக்கு தான் பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. இதனால், உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளர் அஸ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு இருந்தார். அஸ்வின் எப்போதுமே கிரிக்கெட் யுத்தியில் கை தேர்ந்தவர். எந்த மாதிரி யுத்திகளை அமைத்தால், எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்பதை அறிந்தவர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி சில யுத்திகளை பயன்படுத்தி விக்கெட்டுகளை கொடுக்காமல் விளையாடி வந்தது. இதனால், அஸ்வின் வாட்டர் பாயாக களத்திற்குள் வந்து, தன்னுடைய அறிவுரைகளை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வழங்கினார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் அஸ்வினை பாராட்டி வருகின்றனர். அணியில் இடமில்லை என்றாலும், கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல், வாட்டர் பாயாக வந்து அணியின் வெற்றிக்காக அறிவுரை வழங்கி சென்று இருக்கிறார்.