fbpx

செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..

செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

186 நாடுகள் பங்கேற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் ஓபன் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டன. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் இரு பிரிவிலும் இந்தியா சார்பில் தலா 3 அணிகள் களம் இறங்கின.

நேற்று நடந்த இறுதி சுற்று முடிவில் ஓபன் பிரிவில் தோல்வியை சந்திக்காத உஸ்பெகிஸ்தான் அணி (8 வெற்றி, 3 டிரா) 19 புள்ளிகளும், அர்மேனியா அணி (9 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 19 புள்ளிகளும் எடுத்து சமநிலை வகித்தன. இதையடுத்து டைபிரேக்கர் புள்ளி அடிப்படையில் முன்னிலை பெற்ற உஸ்பெகிஸ்தான் அணி தங்கப்பதக்கத்தை வென்றது. அர்மேனியா அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் பி அணி (8 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) 18 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தை பெற்றது. ஏற்கனவே நடந்த போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி வெண்கல பதக்கம் வென்றது..

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. பொதுப்பிரிவில் வென்ற இந்திய பி அணி, மகளிர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.. எனவே வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணிக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்..

Maha

Next Post

பெண் குளிக்கும்போது வீடியோ எடுத்து அண்ணனுக்கு அனுப்பி வைத்த இளைஞர்..! சிக்கியது எப்படி?

Wed Aug 10 , 2022
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வேளச்சேரியை அடுத்த சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 18வது தெருவைச் சேர்ந்தவர் விஜய் (21). இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு தெரியாமல் விஜய் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த […]

You May Like