fbpx

நூலிழையில் தப்பிய இந்திய மகளிர் அணி..!! அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்..!!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8-வது மகளிர் டி20 ஓவர் உலகக் கோப்பை
தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணியினர் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 56 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். இதனை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, முதல் பந்திலேயே துவக்க வீராங்கனை அமி ஹன்டர் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரின் 5-வது பந்தில் ஓர்லா ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேபி லெவிஸ், கேப்டன் லாரா டெலானி நிதானமாக விளையாடினார்.

அயர்லாந்து அணி 8.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த காற்றுடன் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 6 புள்ளியுடன் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் இந்திய அணி, உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது. பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா தலா 6 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

Chella

Next Post

ஓலா, ரேபிடோ சேவைகளுக்கு அதிரடி தடை..!! மீறினால் 10,000 அபராதம்..!! மாநில அரசு அறிவிப்பு..!!

Tue Feb 21 , 2023
பைக் டாக்சி சேவைகளுக்கு தடை விதித்து டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் பைக் டாக்சி சேவைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. டாக்சி சேவைகளை வழங்கும் நிறுவனங்களான ரேபிடோ, ஓலா, உபர் போன்றவை ஆட்டோ, கார் டாக்சி சேவைகளை வழங்கி வந்த நிலையில், தற்போது பைக் டாக்சி சேவையையும் வழங்கி வருகிறது. இந்த சேவை விலை குறைவாக இருப்பதாலும் மக்கள் அதிகம் […]

You May Like