fbpx

கடத்தப்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!… வேலை வாங்கி தருவதாக கம்போடியாவுக்கு கடத்தல்!

Cambodia: வேலைவாங்கி தருவதாக கூறி கம்போடியாவிற்கு கடத்தப்பட்ட இந்தியர்களில் முதற்கட்டமாக 60 பேர் தாயகம் திரும்பினர்.

கடந்த மாதம் வேலை வாங்கி தருவதாக கூறி 5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 20ம் தேதி கம்போடியாவில் 300 இந்தியர்கள் தங்கள் கையாள்களுக்கு எதிராக ‘கிளர்ச்சி’ செய்ததாக ஆந்திரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வெளி நாட்டில் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திராவைச் சேர்ந்த 150 இளைஞர்கள் கம்போடியாவில் ஒரு வருடமாக சிக்கிக் கொண்டுள்ளனர், அங்கு சீன ஏஜெண்டுகளால் சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் டாஸ்க் கேம் மோசடி, பங்குச் சந்தை மோசடி உள்ளிட்டவற்றை செய்ய சீன ஏஜெண்டுகளால் வற்புறுத்தப் படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்த கடத்தப்பட்ட இந்தியர்கள் கம்போடியாவில் உள்ள ஜின்பே மற்றும் கம்பவுண்ட், சிஹானூக்வில் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான கலவரங்களை ஏற்படுத்தினர். இது சைபர் குற்றங்களுக்கான மையமாக கூறப்படுகிறது.

காவல்துறையின் எண்களுக்கு போன் செய்து அதுதொடர்பான வீடியோக்களை அனுப்பியுள்ளனர். அந்தவகையில் சுமார் 300 இந்தியர்கள் கம்போடியாவில் தங்கள் ஏஜெண்டுகளுக்கு எதிராக பெரிய அளவில் ‘கிளர்ச்சி’ செய்தனர். மேலும் அவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து மீட்பு நடவடிக்கையில் இறங்கிய கம்போடியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முதற்கட்டமாக 60 இந்தியர்களை மீட்டு தாயகம் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பதிவில், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுக்கு உதவ எப்போதும் உறுதிபூண்டுள்ளோம். மோசடியான முதலாளிகளிடமிருந்து கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்ட 60 இந்தியர்களின் முதல் தொகுதி தாயகம் திரும்பியுள்ளனர். கம்போடிய அதிகாரிகளின் ஆதரவுக்கு நன்றி” என்று கூறியுள்ளது

Readmore: இந்தியாவில் கேன்சர் மருந்துகளுக்கு தடை..? இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழுமம் அதிரடி உத்தரவு..!!

Kokila

Next Post

சீசன் முழுவதும் 52 ரன்கள்தான்!… தோனியுடன் ஒப்பிட்டு மேக்ஸ்வெலை கலாய்க்கும் ரசிகர்கள்!

Fri May 24 , 2024
Maxwell: 2024 ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி 24 பந்துகள் 33 ரன்களும், டூ பிளேசிஸ் 14 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேமரான் கிரீன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஐந்தாம் வரிசையில் […]

You May Like