fbpx

INDvsPAK: குறுக்கிட்ட மழை, தார்ப்பாயை தூக்கி கொண்டு ஓடிய பாகிஸ்தான் வீரர்..!

இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டது, அப்போது மைதான ஊழியர்களுக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் வீரர் செய்த செயல் இணையத்தில் பாராட்டு மழையில் நனைத்து வருகிறது

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பமோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் கில் இருவரும் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர்.

இந்தியாவின் முதல் விக்கெட் 16.4 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விழுந்தது, அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் ஷர்மா 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார், அவரைத்தொடர்ந்து அடுத்த ஓவரே(17.5) கில்லும் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விராட் கோலியுடன் ( 16 பந்துகளில் 8 ரன்கள்) அட்டமிழக்காமல் ஆடி வருகிறார் கே.எல்.ராகுல் ( 28 பந்துகளில் 17 ரன்கள்). இப்படி போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் 24.1ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.

அப்போது மழையின் வேகம் அதிகமானதால் மைதான ஊழியர்கள் ஆடுகளத்தை மூட தார்ப்பாயை எடுத்து செல்லும் போது அவர்களுக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஃபகார் ஜமானும் அந்த தார்ப்பாயை இழுத்துக்கொண்டு சென்றார், இதை பார்த்த அனைவரும் அவரது செயலை பாராட்டி வருகின்றனர். இது இணையத்திலும் வேகமாக பரவி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

மழையால் ஆட்டம் குறிக்கிட்டபோது இந்திய அணி 24.1 ஓவர்களில் 2விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான், அப்ரிடி ஆகியோர் தல ஒரு விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

Kathir

Next Post

குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் வருகிறதா?... நுரையீரல் தொற்று அபாயம்!… பெற்றோர்களே கவனம்!

Sun Sep 10 , 2023
மழைக்காலம் வந்துவிட்டாலே போதும், ஆஸ்துமா பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஒவ்வொரு பிரச்சனையாக வரத் தொடங்கும். பருவ மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும், அடிக்கடி மழை பெய்வதாலும், ஒவ்வாமை அதிகரித்து சுவாச அமைப்பில் நோய்த்தொற்று உண்டாகிறது. இதனால் ஆஸ்துமா பாதித்துள்ள குழந்தைகளை அடிக்கடி மருத்துவமணைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனினும், இதுகுறித்த சரியான அறிவோடு முறையாக மேலாண்மை செய்தால், பெற்றோர்களாகிய நீங்கள் மழைக்காலங்களில் ஏற்படும் பல ஆபத்துகளிலிருந்து உங்கள் குழந்தைகளை […]

You May Like