fbpx

அதிகரிக்கும் இன்ஃபுளூயன்ஸா வைரஸ்!… எச்சரிக்கை விடுத்த மத்திய சுகாதார அமைச்சகம்!

Influenza: இன்ஃபுளூயன்ஸா வைரஸால் ஏற்படும் பருவகால காய்ச்சலை, பல்வேறு மாநிலங்களில் உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், H1N1 நோயாளிகளைக் கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாட்டின் எந்தப் பகுதியிலும் பருவகால காய்ச்சல் தொற்று அதிகளவில் இல்லை எனவும், அதேசமயம், வரும் காலங்களில் INFLUENZA எனப்படும் சுவாச நோய்த்தொற்று அதிகரிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவகால மற்றும் பறவை காய்ச்சல் வைரஸை உன்னிப்பாக கவனித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பருவகால காய்ச்சல் இரண்டு உச்சநிலைகள் காணப்படுகின்றன. ஜனவரி முதல் மார்ச் வரை மற்றும் மழைக்காலத்திற்கு பிந்தைய காலத்திலும் இது ஏற்படுகிறது. மேலும் பருவக்கால காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்கள், நோயாளிகளின் வகைப்பாடு, சிகிச்சை நெறிமுறைகள் போன்ற வழிகாட்டுதல்களை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையத்தளமான (www.mohfw.nic.in)-ல் பார்க்கலாம்.

அதிகரிக்கும் கோடைக்கால நோய்களுக்கு மத்தியில் பறவைக்காய்ச்சலின் பாதிப்பு கேரளா, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் நாளுக்குநாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: கொளுத்தும் வெயில்..! சென்னை மக்கள் காலை 11 முதல் 3 மணி வரை வெளியே வர வேண்டாம்…!

Kokila

Next Post

பரபரப்பு...! 5 மாநில விமான நிலையங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்...!

Wed May 1 , 2024
இந்தியாவில் பல விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நாடு முழுவதும் பாதுகாப்பு கவலை அதிகரித்துள்ளது. கோவா, கொல்கத்தா, வாரணாசி, சண்டிகர் மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது. அச்சுறுத்தல்கள் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும், முழுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று, கோவாவின் டபோலிம் விமான நிலையத்திற்கு அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் முதல் வெடிகுண்டு மிரட்டல் […]

You May Like