fbpx

Infosys நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! சம்பளம் எவ்வளவு..?

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ். இந்த நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி, அசோசியேட் கன்சல்டண்ட் (Associate Consultant) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணிக்கு எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் எம்பிஏ படிப்பை 2024ஆம் ஆண்டில் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் 0 முதல் 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

பொதுவாக இப்பணிக்கு அனுபவம் மிக்கவர்களை தான் இன்போசிஸ் தேர்வு செய்யும். ஆனால், இம்முறை பணி அனுபவம் இல்லாதவர்களும் கூட விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இப்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி, பணிக்கான சம்பளம் என்பது தெரிவிக்கப்படவில்லை. மாத சம்பளம் குறித்த விவரம் பணிக்கான இன்டர்வியூவின் போது தெரிவிக்கப்படும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் அனைத்து இன்போசிஸ் நிறுவனத்திலும் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் இருப்பவர்கள் இந்த பணிக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

Read More : பிக்பாஸ் தமிழ் சீசன் 8இல் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் இவர்கள் தான்..!! அட CWC-இல் இருந்து இவரா..?

English Summary

Infosys, one of the leading IT companies, has released a new recruitment notification.

Chella

Next Post

வலுபெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 3 நாள்கள் மழைக்கு வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Sat Sep 7 , 2024
As the depression over the Bay of Bengal has strengthened into a deep depression, Tamil Nadu and Puducherry are likely to receive thundershowers, the Meteorological Department said.

You May Like