மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் இன்று தீப்பிடித்து எரிந்தது . இந்த சம்பவத்தில், கப்பலில் பணியாற்றிய மாலுமியை காணவில்லை. அவரை தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியக் கடற்படைக் கப்பலான பிரம்மபுத்ரா, மும்பையில் உள்ள கடற்படைக் கப்பல் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்நது. அப்போது எதிர்பாராத விதமாக அதில் தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தகவல் அறிந்ததும், மும்பை கடற்படை கப்பல்துறை மற்றும் துறைமுகத்தில் உள்ள மற்ற கப்பல்களின் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கப்பல் பணியாளர்களால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தினால் போர்க்கப்பல் ஒரு புறமாக சரிந்தது. அதனை நிலைக்கு கொண்டு வர முடியாமல் கடற்படையினர் திணறி வருகின்றனர். இந்த சம்பவத்தில், கப்பலில் பணியாற்றிய மாலுமி காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
பிரம்மபுத்ரா
ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா என்பது உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ‘பிரம்மபுத்ரா’ வகை வழிகாட்டும் ஏவுகணை போர்க்கப்பல்களில் முதன்மையானது. இது ஏப்ரல் 2000 இல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தக் கப்பலில் 40 அதிகாரிகள் மற்றும் 330 மாலுமிகள் அடங்கிய பணியாளர்கள் உள்ளனர்.
கப்பலில் நடுத்தர தூரம், நெருங்கிய தூரம் மற்றும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், மேற்பரப்பில் இருந்து மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகள் மற்றும் டார்பிடோ ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல் கடல்சார் போரின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பரந்த அளவிலான சென்சார்களைக் கொண்டுள்ளது மற்றும் சீக்கிங் மற்றும் சேடக் ஹெலிகாப்டர்களை இயக்கும் திறன் கொண்டது. ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா 5,300 டன்கள் இடப்பெயர்ச்சி, 125 மீட்டர் நீளம், 14.4 மீட்டர் பீம் மற்றும் 27 நாட்களுக்கு மேல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
Read more ; முக்கிய வனப் பரப்புகளை கொண்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம்..!! – FAO அறிக்கை