உலகின் மிகத் தொலைதூரப் பகுதிகளில், தொடர்பு இல்லாத பழங்குடியினர் மின்சாரம், மளிகைக் கடைகள் மற்றும் நாம் அனைவரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நவீன வாழ்க்கையில் இருந்து விலகி எந்த வசதிகளும் இல்லாமல் தொடர்ந்து வாழ்கின்றனர். பிரேசிலில் மட்டும், சுமார் 100 பழங்குடியினர் அமேசான் படுகையை தங்கள் தாயகமாகக் கொண்டுள்ளனர், இதில் உலகின் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான பழங்குடி குழுவான அவா பழங்குடியினரும் அடங்குவர். வெளி உலகத்தால் அரிதாகவே பார்க்கப்பட்டாலும், இந்த பழங்குடியினர் மழைக்காடுகளுக்குள் ஒரு சிக்கலான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
ஆனால் அங்கு ஆண் பெண் என்ற பேதம் பார்ப்பதில்லை. அவா பழங்குடியின பெண்கள் வேட்டையாட செல்கின்றனர். ஆண்களுக்கான அழகுப் போட்டியை நடத்துகிறார்கள். இளைஞர்கள் ஒப்பனை செய்து நகைகள் மற்றும் சிறந்த ஆடைகளை அணிந்து, பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரிசையில் நிற்கின்றனர்.
நமீபியா மற்றும் அங்கோலாவைச் சேர்ந்த ஹிம்பா பழங்குடியின பெண்கள் கொழுப்பு மற்றும் காவி கலவையான ஓட்ஜிஸ் பேஸ்ட் கொண்டு தோல் மற்றும் முடியை தண்ணீரின்றி சுத்தப்படுத்துகிறார்கள். இது கடுமையான பாலைவன காலநிலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் பட்டர்ஃபேட் மற்றும் ஓச்சர் நிறமியின் கலவையாகும். இதில் சேர்க்கப்படும் ஒமுஸும்பா என்னும் நறுமண பிசின் நல்ல வாசனையை கொடுப்பதோடு சருமத்திற்கு நல்ல அழகான ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஓட்ஜிஸ் பேஸ்ட் சூரியன் மற்றும் கொசுக் கடியிலிருந்தும் பாதுகாக்கிறது.
ஆனால் ஹிம்பா பழங்குடியின பெண்கள் அழகாக இருக்க இதை அணிவார்கள் என்று கூறுகிறார்கள். ஹிம்பா பெண்கள் பருவ வயதிலிருந்தே சிவப்பு களிமண்ணைப் பயன்படுத்தி தங்கள் தலைமுடியை வடிவமைக்கத் தொடங்குகிறார்கள். பாலைவன சூழலான அங்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிதான காரணத்தால் ஓட்ஜிஸ் உடலை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது இறந்த செதில்கள், அழுக்கு மற்றும் இறந்த தோல் போன்றவற்றை நீக்குகிறது. முடியை கழுவ மர சாம்பல் பயன்படுத்தப்படுகிறது.
Read more:CA Result : வெளியானது சி.ஏ. தேர்வு முடிவுகள்.. யாரெல்லாம் ஆடிட்டர்..? உடனே செக் பண்ணுங்க..!